ஒரு பொய் வழக்கு... 24 ஆண்டுகள் சிறை... இறுதியில் இணைந்த காதல் ஜோடி!

வெறும் 500 ரூபாய்க்காகக் கொலைசெய்ததாக பொய் வழக்கு... அதனால் நொறுங்கியது ஒரு காதல் தம்பதியின் கனவு... இடையில், துயரம் மிகுந்த 28 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் ஒன்றுசேர்ந்த காட்சி... மனதை நெகிழவைக்கும் துயரம் மிகுந்த காதல் காவியம்!

‘‘விஜயா இங்கே வந்தப்போ, பித்துப் பிடிச்சுப்போய் இருந்துச்சு. 15 நாளைக்கு ஒருமுறை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப்போய் சிகிச்சை கொடுத்துட்டு வந்தாங்க. தினமும் காலையில எந்திரிச்சு, குளிச்சுட்டு நெத்தியில குங்குமம் வெச்சிக்கிட்டு சாமி கும்பிடும். அப்போ, ‘மாமா மாமா’ன்னு சொல்லுமே தவிர, வேற வார்த்தையே வராது. தனியா உக்காந்து அழும். ‘அழாத’னு ஆறுதல் சொல்வோம். ஜெயில்ல இருந்து ரிலீஸாகி கணவர் வர்றார்னு தெரிஞ்சதும் அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு. அவர் இங்கே வந்ததும், ‘மாமா மாமா’ன்னு  கதறிகிட்டு ஓடிப்போய் கட்டிப் புடிச்சுக்கிச்சு. அதைப் பாத்துட்டு எங்களுக்கும் ஒரே அழுகையா வந்துச்சு...’’ -முதியோர் இல்லத்தில் இருப்பவர்கள் இப்படிச் சொல்வதைப் புரிந்துகொள்ள சில ஆண்டுகள் பின்னோக்கிப் பயணிக்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்