ஸ்ரீதருக்குப் பிறகு யார்? - காஞ்சிபுரத்தில் ‘செக்கச்சிவந்த வானம்’!

காஞ்சிபுரம் மற்றும் சென்னை புறநகர்ப் பகுதிகளில் தனது க்ரைம் நெட்வொர்க்கை துபாயில் இருந்தே இயக்கிய தாதா ஸ்ரீதர் மறைந்து ஒரு வருடம் ஓடிவிட்டது. ஸ்ரீதர் இறந்த தகவலைக் கேட்டதும் காஞ்சிபுரம், சென்னை புறநகர் வியாபாரிகளும் பொதுமக்களும் நிம்மதியடைந்தனர். அந்த நிம்மதி நிலைத்திருக்கிறதா, குற்றங்கள் குறைந்துள்ளனவா, ரவுடிகளும் தாதாக்களும் இன்னமும் வலம் வருகிறார்களா? இதோ ஒரு ரவுண்ட் அப்...

ஸ்ரீதருக்கு பின்னர், ரவுடிகள் பிடியில் இருந்து காஞ்சிபுரமும், சென்னை புறநகரும் மீளும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்த ஸ்ரீதர் யார் என்பதில் ‘செக்கச் சிவந்த வானம்’ ரேஞ்சுக்குப் போட்டி நிலவுகிறது. குற்றங்களும் அதிகரித்துள்ளன. இதில் முன்னணியில் இருக்கிறார்கள் தினேஷ், தணிகைவேல். இருவருக்கும் கடும் பகை. 25.11.2017 அன்று காஞ்சிபுரம் ரயில்வே நிலையம் அருகில் தினேஷ் கார் மீது தணிகைவேலின் ஆட்கள் பெட்ரோல் குண்டு வீசினர். உயிர் பிழைத்த தினேஷ், தணிகைவேலை பழிவாங்கக் காத்திருக்கிறார். தணிகைவேல், வேலூர் ரவுடிகளின் பாதுகாப்பில் வலம்வருகிறார். சமீபத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட தினேஷ், தற்போது புழல் சிறையில் உள்ளார். அவர் மீது காவல் துறையில் புகார் கூறிய வழக்கறிஞர் சிவக்குமாரை, தினேஷின் ஆட்கள் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி கண்டந்துண்டமாக வெட்டினர். அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!