மிஸ்டர் மியாவ்

‘தங்கமீன்கள்’, ‘பேரன்பு’ படங்களில் நடித்த சாதனா, மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கு ஸ்பீச் தெரபி, நடனம் ஆகியவற்றைக் கற்றுக்கொடுத்துவருகிறார். அவரின் இந்தப் பணிக்கு இளம் சாதனையாளர்களை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் ‘டயானா’ விருது கிடைத்துள்ளது. 

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா ஆகியோர் நடித்திருக்கும் ‘வடசென்னை’ படத்துக்கு சென்சார் குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. எந்தக் காட்சியையும் தணிக்கைக் குழு நீக்கச் சொல்லவில்லை என்ற மகிழ்ச்சியில் இருக்கிறதாம் படக்குழு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick