கோபால் கைதுக்கு ராஜகோபால் காரணமா?

த்திரிகையாளரான பன்வாரிலால் புரோஹித் தமிழக கவர்னராகப் பதவியேற்று, அக்டோபர் 6-ம் தேதியோடு ஓர் ஆண்டு நிறைவடைந்தது. அடுத்த மூன்றாவது நாளே பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலை கைது செய்து கருத்துச் சுதந்திரத்தைக் காலில் போட்டு மிதித்திருக்கிறது கவர்னர் மாளிகை. கைது செய்த அன்றைய தினமே, நீதிமன்றம் கோபாலை விடுவித்துவிட்டது. ஆனாலும், தன்மீது படிந்த களங்கத்தைப் போக்க என்ன செய்யப்போகிறார் கவர்னர்?

கவர்னரின் துணைச் செயலாளர் பதவிவகிக்கும் டி.செங்கோட்டையன் சென்னை போலீஸ் கமிஷனரான ஏ.கே.விஸ்வநாதனிடம் அளித்த புகாரின் அடிப்படையில்தான், கோபால் கைது செய்யப்பட்டார். ‘இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124-ன் கீழ் கோபாலை நீதிமன்றக் காவலில் அடைக்க முகாந்திரம் இல்லை’ எனக் கூறி மாஜிஸ்திரேட் விடுதலை செய்தார்.

பொதுவாக, சட்டப் பிரிவையெல்லாம் சுட்டிக் காட்டி யாரும் புகார் அளிப்பது வழக்கம் இல்லை. ஆனால், செங்கோட்டையன் அளித்த புகாரில், 124-ம் பிரிவைச் சுட்டிக்காட்டியுள்ளனர். அதை அப்படியே ஆமோதித்து வழக்கும் போட்டிருக்கிறது போலீஸ். யார் இந்த செங்கோட்டையன்? ராஜ்பவனில் விசாரித்தோம்.

‘‘ஆளுநர் செயலகம், ஆளுநர் இல்லம் என இரண்டு அலுவலகங்கள் ராஜ்பவனில் உண்டு. ஆளுநர் இல்ல அலுவலகத்தை வழிநடத்தும் கன்ட்ரோலர் பதவியில் இருப்பவர்தான் செங்கோட்டையன். இதற்கு முன்பு எட்டு ஆண்டுகளாக இந்தப் பதவியில் இருந்த முரளிதரன், சவுரிராஜன் ஆகியோர் பல்வேறு காரணங்களால் மாற்றப்பட்ட பிறகு, வேலூர் மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த செங்கோட்டையன் இந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick