ஆனைமலையில் சிறுத்தைகள் வேட்டை! - சர்வதேச கடத்தல் கும்பலின் கைவரிசையா?

கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதியில் சிறுத்தை ஒன்று வேட்டையாடப்பட்ட விவகாரத்தில், பழங்குடியினர் சிலரைக் குற்றம்சாட்டுகிறது வனத்துறை. செய்யாத குற்றத்துக்காகத் தங்களை வனத்துறையினர் மிரட்டுவதாகப் புகார் சொல்கிறார்கள் பழங்குடியினர். உண்மை என்ன?

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட காண்டூர் கால்வாயில் சில நாள்களுக்கு முன்பு தலை மற்றும் கால் நகங்கள் துண்டிக்கப்பட்ட நிலையில், சிறுத்தையின் சடலம் கிடந்தது. உடல் பரிசோதனையில் இது வேட்டை என்பது உறுதியானது. பந்தக்கால் அம்மன் பகுதியைச் சேர்ந்த முருகன், கனகராஜ், குமார் ஆகிய மூவரைப் பிடித்துவந்த வனத்துறை, அவர்களிடம் விசாரணை நடத்தியது. ஆனால், ‘வனத்துறையினர் விசாரணை என்கிற பெயரில் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி அடித்துச் சித்ரவதை செய்தனர்’ என்று குற்றம்சாட்டுகிறார்கள் பழங்குடியினர். தொடர்ந்து ஆனைமலை வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட பழங்குடியினர், சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகளைக் கைது செய்ய வலியுறுத்திப் போராட்டம் நடத்தினர். வனத்துறையினர் மீது பழங்குடியினரும், பழங்குடியினர் மீது வனத்துறையினரும், பரஸ்பரம் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick