சுவிட்சர்லாந்தில் நடந்தது என்ன? - மனம் திறக்கிறார் மாணிக்கவிநாயகம் | Chinmayi sexual harassment complaint on Vairamuthu - Junior Vikatan | ஜூனியர் விகடன்

சுவிட்சர்லாந்தில் நடந்தது என்ன? - மனம் திறக்கிறார் மாணிக்கவிநாயகம்

ஹாலிவுட், பாலிவுட்டைத் தாண்டி கோலிவுட்டையும் புரட்டிப்போடத் தொடங்கியுள்ளது ‘MeToo’ புயல். இந்தப் புயலின் மையம், பின்னணிப் பாடகி சின்மயி. அந்த மரியாதை மனிதர், கவிஞர் வைரமுத்து. ஒரு பெண் தனக்கு அனுப்பியதாக சில குறுந்தகவல்களை சந்தியா மேனன் என்ற பத்திரிகையாளர், தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதுதான் இந்த விவகாரத்தின் தொடக்கப்புள்ளி. அந்தப் பதிவில், ‘ஒரு புராஜெக்ட் விஷயமாகச் சென்றிருந்தபோது, கவிஞர் வைரமுத்து என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார்’ எனக் குறிப்பிட்டிருந்தார். சந்தியா மேனனின் அந்த ட்வீட்டை ரீட்வீட் செய்த சின்மயி, ‘வைரமுத்து பற்றி எல்லோருக்கும் தெரியும். பாடகிகளும் இதை அறிவார்கள்’ என்று பதிவிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து, ‘2004-ம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்ற இடத்தில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மூலம் வைரமுத்து என்னை தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அழைத்தார்; நான் மறுத்தேன்’ என அடுத்த ட்வீட்டைப் பதிவிட்டார் சின்மயி. அந்த ட்வீட்டைத் தொடர்ந்து வைரமுத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல ட்வீட்டுகள் முளைத்தன. அதுவரை கருத்து எதுவும் சொல்லாமல் அமைதிகாத்த வைரமுத்து, ‘அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன். அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை’ என ட்விட்டரிலேயே பதிவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick