கன்ட்ரோல் ரூம்

கூரையைக் களவாடிய கான்ஸ்டபிள்

தி
ருச்சி சோமரசம் பேட்டை பகுதியில் சூதாட்ட கிளப் ஒன்று ரவுடிகள் கட்டுப்பாட்டில் இயங்கிவந்தது. அந்த கிளப், எப்போதும் களைக்கட்டும். சில மாதங்களுக்கு முன், அப்பகுதியில் ரவுடிகள் இடையே நடந்த மோதலில் அங்கிருந்த குடியிருப்புகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதையடுத்து, கிளப் மூடப்பட்டது. முருகன் பெயரைக் கொண்ட ஒரு போலீஸ்காரர், மூடப்பட்ட கிளப்பின் மேற்கூரையைக் கழற்றிக்கொண்டுபோய், தன் வீட்டு மாடியில் கொட்டகை அமைத்துவிட்டாராம். கிளப் இல்லாததால் மாமூல் நின்றுபோனது. ‘பாதிக்கப்பட்ட’ போலீஸார், தோப்புகளிலும் ஒதுக்குப்புறமான பகுதிகளிலும் சூதாட்டம் நடத்திக்கொள்ள ‘அனுமதி’ அளித்துள்ளனர். மீண்டும் மாமூல் மழையில் போலீஸார்!

தானம் விலைபோகலாமா?

பு
துச்சேரி காவல்துறை ஆரம்பிக்கப்பட்ட நாளையொட்டி காவல்துறையினர் காரைக்காலில் ரத்த தானம் செய்தனர். சீனியர் எஸ்.பி-யான ராகுல் அல்வால் தொடங்கி, கீழ்மட்டக் காவலர்கள் வரை சுமார் 40 யூனிட் அளவுக்கு ரத்த தானம் செய்தனர். இந்த ரத்தத்தை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கும் அரசுப் பொது மருத்துவமனையின் ரத்த வங்கிக்கு அளித்திருக்க வேண்டும். ஆனால், ஒரு யூனிட் ரத்தம் 2,500 ரூபாய் என்று கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவக்கல்லூரி ஒன்றின் மருத்துவமனைக்கு ரத்தத்தை வழங்கியிருக்கிறார்கள். போலீஸார் தன்னலம் இல்லாமல் தானமாக வழங்கிய ரத்தம் விலைபோகலாமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick