நேஷனல் ஹைவே

தம்பிகளுக்குள் தகராறு!

பீ
கார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தில் என்ன நடக்கிறது என்று புரியாமல் தவிக்கிறார்கள் கட்சிக்காரர்கள். லாலுவின் மூத்த மகள் மிசா பாரதி, அந்தக் கட்சியின் சார்பில் ராஜ்ய சபா எம்.பி-யாக இருக்கிறார். ‘‘என் தம்பிகளுக்கிடையே சண்டை நடக்கிறது. குடும்பத்தில் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்’’ என்று கட்சிக்கூட்டத்தில் பேசினார் மிசா பாரதி. 

அவரின் தம்பிகள் இருவருமே இப்போது பீகார் எம்.எல்.ஏ-க்கள். ‘‘எங்களுக்குள் சண்டை எதுவுமில்லை’’ என மறுத்திருக்கிறார், ஒரு தம்பியான தேஜ் பிரதாப் யாதவ். இன்னொரு தம்பியும் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், ‘‘எனக்கு இதுபற்றி எதுவும் தெரியாது. நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை’’ என மையமாகப் பதில் சொல்லியிருக்கிறார். ‘என்னமோ நடக்குது’ என்பது மட்டும் புரிகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick