ஐயப்பனின் பிரம்மசர்யம் காப்பது எங்கள் கடமை! - தீர்ப்புக்கு எதிராகத் திரளும் பெண்கள்

பரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைச் செயல்படுத்துவோம் என்று பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, போராட்டக்களமாக மாறிக்கிடக்கிறது கேரளம். மாநில அரசின் முடிவுக்கு எதிராக பி.ஜே.பி மற்றும் இந்து அமைப்புகள் மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சியும் தெருவில் இறங்கிப் போராடுகிறது. மேலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக ஏராளமான பெண்கள் கேரள வீதிகளில் இறங்கிப் போராடுகிறார்கள்.

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு எதிராகப் பெண் பக்தர்களில் ஒரு பிரிவினர் கேரளாவில் 2016-ல் ‘ரெடி டு வெயிட்’ என்ற பிரசார இயக்கத்தைத் தொடங்கினர். அதன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பத்மா பிள்ளையிடம் பேசினோம். “அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக்குப் போகலாம் என்ற தீர்ப்பை நாங்கள் ஏற்கவில்லை. சபரிமலைக்கு நாங்கள் போகாமல் இருப்பது எங்களுக்கு நாங்களே போட்டுக்கொண்ட கட்டுப்பாடு. ‘நாங்கள் காத்திருக்கத் தயார்’ என்ற எங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாகவே,  ‘ரெடி டு வெயிட்’ என்ற இயக்கத்தை ஏற்படுத்தினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick