கலங்கிய கடவுளின் தேசம்... கைகொடுத்த வாசகர்கள்!

ழை ஒன்றும் கேரளாவுக்குப் புதிதல்ல. ஆனால், இந்த ஆகஸ்ட் மாதம், அந்த மழை காட்டிய அதிரடியில் கேரளாவே கலங்கியது. 57,000 ஹெக்டேருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் சீரழிவு, 483 பேர் உயிரிழப்பு, 14.50 லட்சம் பேர் முகாமில் தஞ்சம் என்று பேரிடரை எதிர்கொள்ளத் திணறிய கேரளாவுக்கு இந்தியாவின் எல்லா திசைகளிலிருந்தும் நீண்டன உதவிக்கரங்கள்.

இயற்கைப் பேரிழப்புகளின்போது, கள நிஜ நிலவரங்களைக் கொண்டுசேர்ப்பதோடு நின்றுவிடுவதில்லை விகடன். நீங்கள் கரம்கோக்க, களப்பணியிலும் விகடன் சாதித்தவற்றுக்கு கடந்த கால சாட்சிகள் ஏராளம். தானே புயல் நிவாரணம், காவிரி டெல்டா வறட்சி நிவாரணம், சென்னை வெள்ள நிவாரண உதவிகள், ‘அறம் செய விரும்பு’ மூலம் அரசுப்பள்ளிகளுக்கான தேவைகள் என்று எல்லாவற்றிலும் உங்களோடு இணைந்து செயலாற்றியிருக்கிறோம். அதுபோலவே கேரள பாதிப்புக்காக விகடன் சார்பில் ரூ.10 லட்சத்தை அறிவித்துவிட்டு, ‘கேரளாவுக்குக் கைகொடுப்போம்’ என்று வாசகர்களையும் அழைத்திருந்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick