சுருங்கிப்போன ஓடை... சுணக்கம் காட்டும் அதிகாரிகள்! - ஈரோடு அவலம்... | Stream occupied in Erode - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/10/2018)

சுருங்கிப்போன ஓடை... சுணக்கம் காட்டும் அதிகாரிகள்! - ஈரோடு அவலம்...

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் கூடாது என்று பல்வேறு தீர்ப்புகளில் உத்தரவிட்டிருக்கிறது நீதிமன்றம். ஆனால், அப்போதைக்கு வேலை நடக்கும். பின்பு ஆக்கிரமிப்புகள் தொடரும். அப்படித்தான் ஈரோட்டில் உள்ள ஓர் ஓடையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுகளைப் பிறப்பித்தும் பலன் இல்லை. பெரும்பாலான ஆக்கிரமிப்புகள் அப்படியேதான் இருக்கின்றன.

ஈரோட்டில் பெரும்பள்ள ஒடை, பிச்சைக்காரன் ஓடை ஆகியவைதான் பிரதான ஓடைகள். ஒரு காலத்தில் இவை ஈரோடைகள் என்று அழைக்கப் பட்டன. அதுவே மருவி ‘ஈரோடு’ ஆனது என்று பெயர்க் காரணம் சொல்கிறார்கள். இதில் பெரும்பள்ள ஒடை பல கிராமங்களின் நிலத்தடி நீர் மற்றும் பாசனத்துக்கான ஆதாரமாக இருக்கிறது. இந்த ஓடையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கதிராம்பட்டியைச் சேர்ந்த ‘இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ள ஓடைப் பாதுகாப்பு நலச் சங்க’த் தலைவர் சண்முகசுந்தரம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 2015, டிசம்பரில் தொடரப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. ஆனாலும், மாவட்ட நிர்வாகம் கண்துடைப்புக்காக சில பணிகளைச் செய்துவிட்டு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க... கோபம் அடைந்த நீதிபதிகள், ‘இங்கு மட்டுமல்லாமல், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளின் விவரங்களை துல்லியமாகக் கேட்டு ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டனர். ஆனாலும் பலன் இல்லை.