நட்புக்காக செய்த கொலைகள்... வளைக்கப்பட்ட மோகன்ராம்!

தொடர்ச்சியாகப் பல கொலைகளைச் செய்து திண்டுக்கல் நகரை நடுநடுங்க வைத்துக்கொண்டிருந்த பிரபல தாதா மோகன்ராம், மும்பையில் தலைமறைவாக இருந்தபோது போலீஸாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மட்டுமல்லாமல், அவரின் கூட்டாளிகள் பலரும் கைது செய்யப்பட்டுவருகிறார்கள். காவல்துறையினரின் இந்த நடவடிக்கையால், திண்டுக்கல் வட்டார ரவுடிகள் அச்சத்தில் உள்ளனர்.

1998 முதல் 2004 வரையிலான காலகட்டத்தில், ரத்தபூமியாக இருந்தது திண்டுக்கல். கரடி மணி, மெட்ராஸ் பாண்டி என்ற திண்டுக்கல் பாண்டி ஆகிய கோஷ்டிகளுக்கு இடையே நடைபெற்ற தொடர் கொலைகள், திண்டுக்கல்லை அப்போது அச்சத்தில் உறையவைத்தன. அப்போது ரவுடியாக உருவெடுத்தவர்தான் மோகன்ராம். இவர் பற்றி போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick