சிக்கிய ரயில் கொள்ளையர்கள்... ‘பார்தி’ கோஷ்டியின் பயங்கர நெட்வொர்க்!

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை மனதில் ஓடவிடுங்கள்... அதில் வரும் முக்கியக் கதாபாத்திரங்கள் தான் இந்த ரயில் கொள்ளைச் சம்பவத்திலும் வருகின்றன. கூகுளில் ‘பார்தி கேங்க்’ என்று தேடினால்... மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் கொள்ளைச் சம்பவங்களை அரங்கேற்றிவரும் அந்த கேங்க் பற்றிய திடுக்கிடும் விவரங்களைப் பார்க்கலாம்.

மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்ட்ர மாநிலங்களில் வாழும் பழங்குடி இனம்தான் ‘பார்தி’. சத்ரபதி சிவாஜி தனது வெளிவட்டப் பாதையில் நிறுத்தியிருந்த காவல் படையினர், பார்தி இனத்தவர்தான். இவர்களை எதிர்த்த மன்னர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினார்களாம். பார்திகளை எதிர்த்துப் போரிட ராஜஸ்தான் மாநில மலைப்பாங்கான பகுதியைச் சேர்ந்த இன்னொரு கும்பலை சில மன்னர்கள் ரெடி செய்தனர். இதன் பெயர், பவாரியா கும்பல். மன்னர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட இவர்கள், பிற்காலத்தில் பிழைப்புக்கு வழி தெரியாமல் கொள்ளையடிப்பதில் இறங்கினர். பிரிட்டிஷ் காலத்தில் குற்றப்பரம்பரையினராக அறிவிக்கப் பட்ட இனங்களில் ‘பார்தி’யும் ஒன்று.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick