இலங்கையின் அத்துமீறல்களுக்கு துணைபோகிறதா இந்தியா?

மீனவர்களைக் குற்றம்சாட்டும் கடலோரக் காவல்படை!

லங்கைக் கடற்படையின் அத்துமீறல்கள், உயர்ந்துவரும் டீசல் விலை, மாறிவரும் இயற்கைச் சூழல்... இவ்வளவு இன்னல்களுக்கும் இடையேதான் தங்கள் உயிரைப் பணயம் வைத்து கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்கிறார்கள் தமிழக மீனவர்கள். இவர்கள் மீது இன்னொரு இடியாக இறங்கியிருக்கிறது, சென்னை உயர் நீதிமன்றத்தில் கடலோரக் காவல்படை தாக்கல் செய்திருக்கும் மனு!

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவது தொடர்பான வழக்குகளை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்க உத்தரவிடக்கோரி மீனவர் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவரான பீட்டர் ராயன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த 9-ம் தேதி நடந்த விசாரணையின்போது, இந்தியக் கடலோரக் காவல்படையின் துணைத் தளபதி சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘தமிழக மீனவர்கள் குழுக்களாக மீன்பிடிக்கச் செல்கிறார்கள். எல்லை தாண்டிச் செல்லும் அவர்களைத் தடுக்க முடியவில்லை. இப்படி எல்லை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் சென்ற 192 படகுகள் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேநேரத்தில், இந்தியக் கடல்பகுதிக்குள் இலங்கை கடற்படையினர் வருவதில்லை’ என்று கூறப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick