மாற்றம் ஏற்படுத்துமா #MeToo புயல்?

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘மீடூ’ (#MeToo) இயக்கம், சமூகம் இத்தனைக் காலமும் கண்ணியமான மனிதராகப் பார்த்துக்கொண்டிருந்த பல பிரபலங்களின் மறுபக்கத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது. நடிகர் நானா படேகர் உள்ளிட்டவர்கள்மீது குற்றம் சாட்டி நடிகை தனுஸ்ரீ தத்தா தொடங்கிவைத்த இந்தப் பிரளயம், ஊடகம், சினிமா, இசை உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்களைச் சாய்த்துவருகிறது. கவிஞர் வைரமுத்துமீது பாடகி சின்மயி தெரிவித்துள்ள குற்றச்சாட்டு மூலம் தமிழ்நாட்டிலும் சுழன்றடிக்கிறது #MeToo புயல்.

பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தாக்குதலுக்கு எதிரான இயக்கமாக ‘மீ டூ’ (எனக்கும்) என்ற ஹேஷ்டேக்குடன் ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் 2017-ம் ஆண்டு சர்வதேச அளவில் பிரசாரம் தொடங்கியது. அலைஸா மிலானோ என்ற அமெரிக்க நடிகை, ‘மீடூ’ என்ற சொற்றொடரை 2017 அக்டோபர் 15-ம் தேதி ட்விட்டரில் பிரபலப்படுத்தினார். அன்றைய தினம் மட்டும் 20,000 பேர் இந்த ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி, தங்களுக்கு வாழ்வில் நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தாக்குதல்கள் தொடர்பாகப் பதிவிட்டனர். மறுநாள் இந்த எண்ணிக்கை 50,000 ஆனது. ஓராண்டுக்குப் பிறகு, இந்தியாவில் சினிமா, ஊடகம் உள்படப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்களும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துயரங்களை வெளியுலகுக்குச் சொல்லிவருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick