“புனிதாவுக்கு ஜாமீன்... நிர்மலாதேவிக்கு ஏன் ஜாமீன் இல்லை?”

ருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளைத் தவறாக வழிநடத்த முயற்சி செய்த வழக்கில், பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஏப்ரல் 16-ம் தேதி கைதுசெய்யப்பட்டார். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டு, எஸ்.பி.ராஜேஸ்வரி தலைமையிலான டீம் விசாரித்தது. நூற்றுக்கும் மேற்பட்டோர் விசாரிக்கப்பட்ட நிலையில், நிர்மலாதேவியுடன் சேர்ந்து கூட்டுச்சதி செய்ததாக மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ளனர். பெரிய தலைகள் உருளும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில், இந்த மூன்று பேருடன் மட்டும் வழக்கு முடிக்கப்பட்டுக் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick