கழுகார் பதில்கள்! - எல்.இ.டி பல்பு அரசாங்கம்!

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை... நிஜமா, கனவா?


கனவுதான். ஆனால், கனவு கண்டால்தானே நிஜமாகும். இதுவும் விரைவில் நிஜமாகும் என்று நம்புவோம்.

க.சு.ஸ.மழாஹிரி, காயல்பட்டினம்.
கருணாஸுடனே சுற்றிக்கொண்டிருந்த, தனி ஆவர்த்தன எம்.எல்.ஏ-க்களான தனியரசு, தமீமுன் அன்சாரி இருவரையும் காணோமே?


அவர்கள் இருவர்மீதும் உமக்கென்ன கோபம்?

@பார்த்தசாரதி.
சாதாரண மழைக்கே பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது, மாநில உள்கட்டமைப்பின் பலவீனத்தைத்தானே காட்டுகிறது?


குழந்தைகளின் பாதுகாப்பு எல்லாவற்றையும்விட முக்கியம் என்பதால், பள்ளிகளுக்கு இப்படி விடுமுறை விடுவது சர்வதேச அளவில் வழக்கமாக உள்ளது. இதற்கும் கட்டமைப்புக்கும் தொடர்பு இல்லை. ஆனால், இங்கு விடுமுறையை அறிவிப்பதில்கூட பலவீனம்தான். பள்ளிக்கூட மணி அடிக்கப் பத்து நிமிடம் இருக்கும்போதுதான் அரசுத் தரப்பிலிருந்து அறிவிப்பே வரும். அதற்குள்ளாக திருநெல்வேலி டவுனில் இருக்கும் பள்ளிக்கூடத்துக்கு, 10 கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் குறிச்சிக்குளத்திலிருந்து குழந்தைகள் கிளம்பியிருப்பார்கள். வீண் அலைக்கழிப்பு. பல தனியார் பள்ளிகள் அரசாங்கத்தின் அறிவிப்பை மதிப்பதே இல்லை என்பது அதைவிட கேவலம்.

ஆர்.அசோகன், திருச்சி-3.
திட்டத்துக்காகக் கமிஷனா... கமிஷனுக்காகத் திட்டமா?


50:50

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.
அடங்காத அரசியல்வாதி எப்போது அடங்குவார்?


ஆறடி நிலமும் சொந்தமில்லை என்பதை உணரும்போது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick