மினி மீல்ஸ்

குப்பைக்கு போலீஸ் பாதுகாப்பு!

தா
மிரபரணி புஷ்கர விழாவில் பங்கேற்க வந்த கவர்னர் பன்வாரிலால் புரோஹித், அப்படியே தூத்துக்குடியில் தூய்மைப் பணிகளையும் மேற்கொண்டார். இதற்காகப் பேருந்து நிலைய வளாகம் தூய்மையாக்கப்பட்டு, குப்பைகளின்றி பளிச்சென்று காணப்பட்டது. கவர்னர் வந்து சுத்தம் செய்வதற்காக, அன்று காலையில் தரமான பேப்பர் குப்பையைச் சேகரித்து ஸ்பெஷலாக வைத்திருந்தனர். அந்தக் குப்பைக்கு ஒரு மணி நேரத்துக்கு மேலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. திடீரென அடித்த காற்றில் குப்பை பறக்க, பதறிய எஸ்.ஐ ஒருவர், ஓடிப்போய்க் குப்பையைப் பாதுகாத்தார்.

பேருந்து நிலையம் முழுவதும் புதிய பிளாஸ்டிக் குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டன. நிகழ்ச்சி முடிந்து கவர்னர் கிளம்பியதும், அவை மாயமாக மறைந்தன. கவர்னருக்குச் சிலர் சால்வை கொடுக்க முயன்றனர். யாரிடமும் அவர் வாங்கவில்லை. கார் கிளம்பிய நேரத்தில், “பாபுஜி... பாபுஜி...” எனச் சொல்லிக்கொண்டே, ‘யோகி ராம் சுரத்குமார் வாழ்க’ என எழுதப்பட்டிருந்த சால்வையை ஒருவர் தூக்கிக்காட்டினார். கார் கண்ணாடியை இறக்கி, அதை மட்டும் பெற்றுக்கொண்டார் கவர்னர்.

‘தூய்மையே’ வெல்லும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick