ஆம்... அவர் பெருங்கடல்தான்!

வெறும் 720 ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி, சிவில் சர்வீஸ் கனவுகளுடன் இருந்த பல இளைஞர்களுக்கு அந்த மகத்தான வாசலைத் திறந்துவிட்டது. கடந்த பல ஆண்டுகளாகவே ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெற வேண்டும் என நினைக்கும் தமிழக இளைஞர்களின் கனவு நாயகனாக சங்கர் இருந்தார். முதல் ஆண்டில் இங்கு 32 மாணவர்கள் படித்தனர். இப்போது, சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி பல கிளைகளைப் பரப்பியுள்ளது. சென்னை அண்ணா நகரில் மட்டும் ஏழு இடங்களில் 1,650 மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள். அத்தனை பேருக்கும் தன்னம்பிக்கை கொடுத்த ஆசான், தவறான முடிவை எடுத்து மரணத்தைத் தேடியது வேதனை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick