வேண்டுதல் நிறைவேறினா நாடகம் போடணும்... இல்லேன்னா பாம்பு வரும்!

- ஒரு விநோத நம்பிக்கை

கோயிலில் வழிபட்டு, வேண்டுதல் நிறைவேறினால் கிடா வெட்டுவார்கள்; தங்கம், வெள்ளியில் பொருள்களை வாங்கிக் கோயிலுக்குக் கொடுப்பார்கள். ஆனால், கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை ஒன்றியம், லட்சுமணப்பட்டியில் உள்ள ஸ்ரீ பாம்பலம்மன் கோயிலில் வேண்டிக்கொண்டு, அந்த வேண்டுதல் நிறைவேறினால் நாடகம் போட வேண்டும் என்ற வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. நாடகம் போடாமல் ஏமாற்றினால், சம்பந்தப்பட்டவர்கள் வீட்டுக்கு இரவு நேரத்தில் பாம்பு வந்து பயமுறுத்தும் என்பது அப்பகுதி மக்களின் விநோத நம்பிக்கை. இந்த ஊரில், வருடத்தில் குறைந்தபட்சம் 75 நாள்களாவது நாடகம் நடக்கிறது. 

தகவல் கேள்விப்பட்டு நாம் அந்த ஊருக்குப் போன நாளில், ‘ஆண் குழந்தை வேண்டும்’ என வேண்டிக்கொண்டு, அந்த வேண்டுதல் நிறைவேறியதால் லட்சுமி என்பவர் ஏற்பாடு செய்திருந்த வள்ளித் திருமணம் நாடகம் நடக்க இருந்தது. இதற்காக ஊர் எல்லையில் இருக்கும் பாம்பலம்மன் கோயிலில் ஏகப்பட்ட கூட்டம். நாடகத்தை நடத்த இருந்த லட்சுமி, அவரின் கணவர் முருகேசன், மகன் பூவேஸ் மற்றும் சொந்தபந்தங்களுடன் கோயில் முன்பு தயாராக இருந்தார். இன்னொரு பக்கம் ஊர் நாட்டாமை சுப்புராம், கோயிலில் பூஜைகளுக்கான உத்தரவுகளைப் பிறப்பித்துக்கொண்டிருந்தார். கரூர் காந்தி கிராமத்தைச் சேர்ந்த இந்திரா என்பவர் தலைமையில் தயாராக இருந்தது நாடகக்குழு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick