“ஹரிணி கிடைக்கலைன்னா மூணு பேரு உசுரும் போவும்!”

செங்கல்பட்டு, பவுஞ்சூரை அடுத்த அணைக்கட்டு காவல் நிலையம் அருகே சென்றால் நீங்களும்கூட அந்தத் தம்பதியரைப் பார்க்கலாம். வயிற்றில் அடுத்த குழந்தையைச் சுமந்துகொண்டிருக்கும் அந்த கர்ப்பிணி, பித்துப்பிடித்ததுபோல அழுகையினூடே உடைந்த வார்த்தைகளில் முனகிக்கொண்டிருப்பதைப் பார்த்தால் நெஞ்சு வெடித்துவிடும் போலிருக்கிறது. அருகில் சென்று உற்றுக்கேட்டால், ‘பா... தோத்தோ... பா... தோத்தோ... பா... பா...’ என்று திரும்பத் திரும்ப அவர் சொல்வது மெலிதாகக் கேட்கிறது. தங்கள் குழந்தையே உலகம் என்று வாழ்ந்துவந்த நாடோடி இனத் தம்பதியர் அவர்கள். சுமார் ஒரு மாதம் முன்பு, இவர்களின் ஒரே பெண் குழந்தையை யாரோ திருடிச்சென்றுவிட... அன்றிலிருந்து சரியாக உண்ணாமல், உறங்காமல் தலைவிரிக்கோலத்துடன் அங்கேயே அலைந்துகொண்டிருக்கிறார்கள் இந்த ஏழைத் தம்பதியர்!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே மானாம்பதி பகுதியில் தற்காலிகமாக வசித்துவருபவர்கள் வெங்கடேசன் - காளியம்மாள் தம்பதியர். இரண்டு வயது பெண் குழந்தை  ஹரிணி, அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அழகாக்கியவள். நாடோடி இனத்தைச் சேர்ந்த இந்தத் தம்பதியர், காதல் மணம் புரிந்தவர்கள். தாங்கள் கைத்தொழிலாகச் செய்திடும் மணி, பொம்மை, கிலுகிலுப்பை மற்றும் அலங்காரப் பொருள்களை ஆட்டோவில் ஏற்றி, ஊர் ஊராகக் கொண்டுசென்று விற்று பிழைப்பு நடத்துபவர்கள். அளவான வருவாய், அன்பான தாம்பத்யம்  என்று  சென்றுகொண்டிருந்த தங்களின் வாழ்வில், அன்றைய தினம் விதி விளையாடும் என்பதைக் கனவிலும் அவர்கள் நினைத்துப்பார்க்கவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick