136 பயணிகளின் உயிருடன் விளையாடிய ஏர் இந்தியா!

திருச்சி விமான நிலையத்திலிருந்து 136 பயணிகளுடன் அக்டோபர் 12-ம் தேதி நள்ளிரவு 1.20 மணிக்கு துபாய்க்குக் கிளம்பியது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம். அதில் பயணித்தவர்கள் உயிர் பிழைத்தது பெரும் அதிர்ஷ்டம் என்றே சொல்லவேண்டும்.

8,136 அடி நீளமுள்ள திருச்சி விமான நிலைய ரன்வேயில் 5,500 அடி தூரம் தாண்டியதும் அந்த விமானம் டேக் ஆஃப் ஆகியிருக்க வேண்டும். அப்படி ஆகியிருந்தால், விமான நிலையச் சுற்றுச்சுவரைத் தாண்டும்போது, அந்த விமானம் தரையிலிருந்து 100 அடி உயரத்தில் இருந்திருக்கும். ஆனால், ரன்வேயின் எல்லைவரை வந்து விமானம் டேக் ஆஃப் ஆனது. விமான நிலையச் சுற்றுச்சுவரில் மோதி, அதில் இருந்த ஐ.எல்.எஸ் ஆன்டெனாவை உடைத்துக்கொண்டு, சுற்றுச்சுவரை அடுத்துள்ள புதுக்கோட்டை சாலையின் மேலே அது பறந்தபோது, தரையிலிருந்து வெறும் ஐந்தரை அடி உயரத்தில் இருந்தது. ஏதாவது பஸ்ஸோ, லாரியோ அப்போது அந்தச் சாலையில் போயிருந்தால் மிகப்பெரிய விபரீதம் நிகழ்ந்திருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick