“சென்னையில் 90 சதவிகிதம் பேருக்கு தண்ணீர் கிடைக்காது!”

ந்தக் கட்டுரை எழுதப்பட்ட அக்டோபர் 17-ம் தேதி மதியம் ஒரு மணிக்கு சென்னையில் கனமழை கொட்டிக்கொண்டிருந்தது. மதியம் சாப்பிட்டு முடித்து, வாஷ்பேசினில் கைகழுவப்போனால் தண்ணீர் வரவில்லை. பிரச்னை இங்கு மட்டுமல்ல... சென்னையின் மிகப்பெரிய ஷாப்பிங் மால் ஒன்று தண்ணீர் இல்லாமல் மூடப்பட்டுள்ளது. பிரபல ஹோட்டல்கள் சிலவும் மூடப்பட்டிருக்கின்றன. ஐ.டி நிறுவனங்கள் பல விடுமுறை அறிவித்துள்ளன. சென்னைக்கு எப்போதுமே ‘தண்ணியில’ கண்டம். 2001-ல் தண்ணீர் இன்றித் தவித்தது சென்னை. 2015-ல் சென்னை மாநகரமே தண்ணீரில் மூழ்கியது. இப்போது சென்னை மற்றும் சென்னை புறநகர்ப் பகுதிகள் தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றன. ஏன் இந்த சிக்கல்?

நிலத்தடி நீரை வணிகமயமாகப் பயன்படுத்துவதை முறைப்படுத்த 2014 மற்றும் 2017ம் ஆண்டுகளில் தமிழக அரசு இ்ரண்டு அரசாணைகளை வெளியிட்டது. அதன்படி மதுபானங்கள், குளிர்பானங்கள் என வணிக நோக்கில் தண்ணீரைப் பயன்படுத்தும் நிறுவனங்களின் பட்டியலில்... தனியார் தண்ணீர் டேங்கர் லாரிகள், கேன் குடிநீர் தயாரிப்பு ஆகியவற்றுக்கு நிலத்தடி நீரை எடுப்பவர்களையும் சேர்த்துள்ளனர். 

இதை எதிர்த்து கேன் குடிநீர் தயாரிப்பாளர்கள் பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் கடந்த 3-ம் தேதி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன் அரசு ஆணைகளை அமல்படுத்த உத்தரவிட்டார். தவிர அரசின் அனுமதி பெறாமல் வணிகரீதியாக நிலத்தடி நீரைப் பயன்படுத்துபவர்களை திருட்டு வழக்கில் கைது செய்யவும் உத்தரவிட்டார். நிலத்தடி நீர் பயன்பாட்டை முறைப்படுத்தவும் உத்தரவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick