பருவத்துக்கு முன்பே பரவும் பன்றிக் காய்ச்சல்!

அலட்சியம் காட்டுகிறதா அரசு?

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை முடக்கிப்போட்ட பன்றிக் காய்ச்சல், இப்போது மீண்டும் தலைகாட்ட ஆரம்பித்துள்ளது. சென்னை, கோவை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பரவிவரும் பன்றிக் காய்ச்சலுக்கு மருத்துவர்கள் சிலரும் தப்பவில்லை. வழக்கமாக குளிர்காலத்தில் வீரியம் கொள்ளும் பன்றிக்காய்ச்சல், இந்த முறை முன்கூட்டியே பரவத் தொடங்கியிருப்பதால், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. 

2015-ல் இந்தியாவில் 42,592 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 2,990 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 898 பேரில் 29 பேர் உயிரிழந்தனர். அடுத்தடுத்த ஆண்டுகளில் நவம்பர் தொடங்கி பிப்ரவரி வரை பன்றிக்காய்ச்சல் பரவினாலும், 2015-ம் ஆண்டு அளவுக்கு உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. இந்த நிலையில், இந்த ஆண்டு குளிர் காலம் தொடங்குவதற்கு முன்பே பன்றிக்காய்ச்சல் வீரியம் கொள்ளத் தொடங்கியிருக்கிறது. ‘தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு 232 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறு பேர் இறந்துள்ளனர். ஆனாலும் நிலைமை கட்டுக்குள் உள்ளது’ என்று தமிழக அரசு கூறுகிறது. ஆனால், ‘கடந்த ஆண்டைவிட நோயின் பாதிப்பு அதிகம். தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துங்கள்’ என்று அரசை எச்சரிக்கிறார்கள் களத்தில் இருப்பவர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick