மறைக்கும் மத்திய அரசு... மீளுமா கீழடி? - தொல்லியல் தொல்லைகள்

கீழடியில் நடைபெற்றுவரும் அகழ்வாராய்ச்சியின் ஆய்வறிக்கையை, ஆராய்ச்சி மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணனை வைத்தே சமர்ப்பிக்க வேண்டும் என்று வழக்கு போடப்பட்டுள்ளது; தொல்லியல் ஆர்வலர்களும் இதே கருத்தைத் தெரிவிக்கிறார்கள். தோண்டப்பட்ட செய்திகளைச் சற்றே கிளறுவோம்...

இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின் பெங்களூரு அகழாய்வுப் பிரிவு, வைகை நதிக்கரை நாகரிகத்தை அறிந்துகொள்ள தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆய்வுசெய்யத் திட்டமிட்டது. 2013-14-ம் ஆண்டுகளில் முதற்கட்டப் பணி துவங்கியது. தொன்மையான வைகை நதியின் நாகரிகத்தைக் கண்டறிய தொல்லியல் எச்சங்கள் அதிகமுள்ள கீழடியில் நான்கு ஏக்கர் பரப்பளவு அகழாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick