கனிமங்களைக் கொண்டுசெல்ல குறுக்கு வழியா?

மதுரை - சென்னை சாலை சர்ச்சை

சென்னை - சேலம் எட்டுவழிச் சாலைப் பிரச்னை இன்னும் தீரவில்லை. இந்த நிலையில், மதுரையிலிருந்து தஞ்சாவூர் வழியாக சென்னைக்கு மற்றொரு சாலைத் திட்டத்துக்கு தயாராகிவருகிறது மத்திய அரசு. டெல்டா பகுதியின் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்டவற்றைக் கொண்டு செல்லவே இந்த சாலை போடப்படுவதாகக் குற்றம்சாட்டுகின்றனர் விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள்.

‘மதுரையிலிருந்து மேலூர், காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக தஞ்சாவூருக்கு சுமார் 2,500 கோடி ரூபாயில் சாலை அமைக்கப்படும்’ என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ‘சென்னை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முயற்சியாக பாரத்மாலா பரியோஜனா திட்டத்தில் இந்த சாலை அமையும். இதன்பின் மதுரையிலிருந்து தஞ்சை வழியாக சென்னை செல்லலாம்’ என்கிறது மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick