“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்!”

- தங்க தமிழ்ச்செல்வன் தடாலடி

‘‘அ.தி.மு.க ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்பது டி.டி.வி.தினகரனின் நிலைப்பாடு. எடப்பாடி, ஓ.பி.எஸ் உட்பட ஆறு அமைச்சர்களை நீக்கிவிட்டு ஆட்சி தொடர வேண்டும் என்பதுதான், தகுதிநீக்கம் செய்யப்பட்டு வழக்கை சந்தித்துவரும் 18 எம்.எல்.ஏ-க்களின் நிலைப்பாடு’’ என்று தங்க தமிழ்ச்செல்வன், சொல்லியிருப்பது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழக ஆட்சி விஷயத்தில் தினகரனுக்கும் அவரின் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்குமிடையே ஒருமித்த கருத்து இல்லையோ என்ற கேள்வியை இது எழுப்பியுள்ளது. இப்படிக் கூறினாலும், தினகரன் கலந்துகொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தங்க தமிழ்ச்செல்வன் உட்பட 18 எம்.எல்.ஏ-க்களும் பங்கேற்கிறார்கள். கடந்த 16-ம் தேதி அ.ம.மு.க சார்பில் மதுரையில் நடந்த கட்டபொம்மன் நினைவு தின நிகழ்ச்சியில் தினகரனோடு தங்க தமிழ்ச்செல்வனும் இருந்தார். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick