“அவங்க சமைச்சதை எங்க குழந்தைங்க சாப்பிட்டா தீட்டு!”

திருப்பூர் அருகே நிகழ்ந்த அந்த அவமானகரமான சம்பவத்திலிருந்து யாரும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதை நிரூபித்திருக்கிறது சேலத்தில் நிகழ்ந்துள்ள இன்னொரு சம்பவம். சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுக்கா குப்பன்கொட்டாய் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், ‘‘பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் சமையலர் சமைத்த சாப்பாட்டை எங்க குழந்தைங்க சாப்பிட்டா தீட்டுப் பட்டுரும். எங்க குலதெய்வத்துக்கு ஆகாது’’ என்று பள்ளியை முற்றுகையிட்டு ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் கூச்சலிட்டதுடன், அந்தச் சமையலரை மாற்றக் கோரி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.

சேலம் மாவட்ட வடக்கு எல்லையில் உள்ள கே.மோரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி. கே.மோரூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவி சமையலராக இருந்தவருக்கு குப்பன்கொட்டாய் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சமையலராக பணி உயர்வு கிடைத்தது. அங்கு இந்தத் தீண்டாமைக் கொடுமை... இது தொடர்பாக, தலைமை ஆசிரியர் உட்பட ஆறு பேர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றவர்கள் தலைமறைவாக, தேவன், மகேந்திரன், சின்னத்தம்பி ஆகிய மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick