ஐயாயிரம் ரூபாய்க்கு ஆதார் அட்டை! | 8 Bangladeshi arrested with fake Aadhaar cards in Tirupur - Junior Vikatan | ஜூனியர் விகடன்

ஐயாயிரம் ரூபாய்க்கு ஆதார் அட்டை!

வங்கதேச ஊடுருவல்காரர்களால் திருப்பூரில் திக் திக்

திருப்பூர் பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் இது. திருப்பூர் செவந்தாம்பாளையத்தில், வட மாநிலத்தவர் சாயல் கொண்ட மூன்று நபர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அவர்கள் மூவரும் வங்க தேசத்திலிருந்து ஊடுருவிச் சட்டவிரோதமாக இங்கு தங்கியிருப்பதும், அவர்களிடம் போலியான ஆதார் அட்டைகள் இருந்ததையும் கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் கொடுத்த தகவலை வைத்து, அதேபகுதியில் வசித்துவந்த வங்க தேசத்தைச் சேர்ந்த மேலும் ஐந்து பேரை போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் முகமது பாபுல் ஹுசைன், முகமது மொன்வார் ஹுசைன் ஆகிய இருவரும் 10 ஆண்டுகளுக்கு மேலாகவே திருப்பூரில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. பாபுல் ஹுசைன், வங்கதேச பாஸ்போர்ட் வைத்துள்ளார். பல ஆண்டுகளாக, திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் பணிபுரிந்துவந்த அவர், கடந்த மூன்று ஆண்டுகளாக இங்கு மளிகைக்கடை நடத்திவந்துள்ளார். இவர்கள் அனைவருமே திருப்பூரில் போலி ஆதார் அட்டைகளை வாங்கியுள்ளனர். அந்த அட்டைகளில், போலியான மேற்கு வங்க மாநில முகவரிகள் உள்ளன. அதை வைத்து, தங்களை மேற்கு வங்க மாநிலத்தினர் என்று சொல்லிக்கொண்டு இங்கு தங்கியுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick