ஓய்வுபெற்றவர்களுக்கு ரயிலை ஓட்டும் வேலை!

- பயணிகள் பாதுகாப்பில் விளையாடும் ரயில்வே

`உங்கள் ரயில் பயணம் பாதுகாப்பானதா? ‘ஆமாம்’ என்று தீர்மானமாகச் சொல்ல முடியாது. சிக்கன நடவடிக்கை என்ற பெயரில், ஓய்வுபெற்றவர்களைக் குறைந்த சம்பளத்தில் நியமிக்கும் ரயில்வே நிர்வாகத்தைக் கண்டித்தும், ‘ஏழாவது சம்பள கமிட்டியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்று கேட்டும் ரயில்வே தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதில் பங்கேற்றுள்ள லோகோ பைலட்டுகள்தான் இப்படிச் சொல்கிறார்கள். காரணம், ரயில்களை இயக்குவதற்கும் ஓய்வுபெற்றவர்களை நியமிப்பதுதான்!

‘‘ரயிலைச் செலுத்தும் லோகோ பைலட்டுக்கு, கண்பார்வைத்திறன் ரொம்ப முக்கியம். தூரத்து சிக்னலில் எரிவது பச்சை விளக்கா, சிவப்பு விளக்கா என்பது எந்த இருளிலும் சரியாகத் தெரியவேண்டும். ஏனென்றால், 50 கிலோ மீட்டர் தூரத்தை 100 கிலோ மீட்டர் வேகத்தில் கடப்பதற்குள், 100-க்கும் மேற்பட்ட சிக்னல்களை கவனித்து ரயிலை இயக்க வேண்டும். மூளையும் பார்வையும் சுறுசுறுப்பாக இணைந்து ஒருமுகமாக இருக்கவேண்டிய பணி இது. இந்தப் பணிக்கு, ஓய்வுபெற்றவர்களை மீண்டும் அமர்த்துவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?’’ என்று ஆதங்கப்படுகின்றனர் லோகோ பைலட்டுகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick