தனியார் நிறுவனத்துக்காக மூடப்படுகிறதா அரசுத்துறை?

அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்துக்கு சிக்கல் வரும்!

“புதிய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்திக் கொண்டிருக்கும் துறையையே தமிழக அரசு காலிசெய்யத் துடிக்கிறது. இதனால் ஐந்தரை லட்சம் அரசு ஊழியர்களின் ஓய்வூதியப் பணத்துக்கே எதிர்காலத்தில் சிக்கல் வரப்போகிறது” என்ற பகீர் தகவலைச் சொல்லிப் பதறவைக்கிறார்கள் அரசுத் தகவல் தொகுப்பு விவர மையத்தில் பணிபுரியும் ஊழியர்கள்.

தமிழக அரசின் ‘அரசுத் தகவல் தொகுப்பு விவர மையம்’ என்ற இந்தத் துறை 1974-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது. இது நிதித்துறையின்கீழ் இயங்கி வருகிறது. ‘பட்ஜெட் டேட்டா சென்டர்’ என அழைக்கப்பட்ட இத்துறை, தமிழக அரசின் நிதித்துறை சார்ந்த அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டு வந்தது. தமிழகத்தில் கணினிமயமாக்கப்பட்ட முதல் துறையும் இதுதான். இந்தத் துறையின் அலுவலகம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தின் அருகே உள்ளது. இந்த அலுவலகத்தைச் சுற்றிலும் காலியாக 18 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த அலுவலகத்துக்குச் சொந்தமான இடத்தில்தான் அண்ணா நூற்றாண்டு நூலகம், தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த 2010-ம் ஆண்டு இந்த அலுவலகத்துக்குப் பின்புறம் உள்ள மூன்று ஏக்கர் நிலத்தை மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் என்ற தனியார்க் கல்வி நிறுவனத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விட்டுள்ளது நிதித்துறை அமைச்சகம். இந்தத் தனியார் கல்வி நிறுவனம் அமைந்துள்ள மூன்று ஏக்கர் நிலமும் இந்த அலுவலகத்துக்குச் சொந்தமானது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick