விரல்களை வெட்டி தலையைத் துண்டித்து உடலைத் துண்டு துண்டாக்கி... உலகை அதிரவைத்த கஷோகி கொலை!

- கே.ராஜு

கூட்டுக்குடும்பத்தில் அதிகம் சம்பாதித்துக்கொடுக்கும் பிள்ளை தப்பு செய்தால், அதைத் தட்டிக்கேட்க எல்லோருமே பயப்படுவார்கள். படுபயங்கரமான படுகொலையைச் செய்திருக்கும் சவுதி அரேபியாவை உலக நாடுகள் கண்டிக்கும்விதம் அப்படித்தான் இருக்கிறது. உலகின் எந்த நாட்டில் பிரச்னை எழுந்தாலும், ‘ஜனநாயகப் படுகொலையைச் சகித்துக்கொள்ள முடியாது’ என அமெரிக்கா குரல் கொடுக்கும்; ஐரோப்பிய நாடுகள் பின்பாட்டுப் பாடும். ஆனால், ‘சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் உத்தரவுப்படி, பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார்’ என்பது உறுதியாகியுள்ளது. ஆரம்பத்தில், ‘சவுதிமீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும்’ என மிரட்டிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இப்போது பல்டி அடித்திருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick