ஜூஸ்... மாத்திரை... ஹெல்மெட்... நாக் அவுட் ஜெயக்குமார்?

மிழகத்தின் ‘செம ஹாட்’ டாபிக் ஆகியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். தன்னிடம் உதவி கேட்டுவந்த ஓர் இளம்பெண்ணை அமைச்சர் ஜெயக்குமார் கர்ப்பமாக்கி, அந்தப்பெண்ணுக்குக் குழந்தையும் பிறந்திருப்பதாக ஜெயக்குமாரின் பெயருடன் வெளியாகியிருக்கும் பிறப்புச் சான்றிதழையும், அவர் பேசியதாகக் கூறப்படும் ஆடியோக்களையும் வெளியிட்டுப் பந்தி வைக்கிறார்கள் தினகரன் ஆதரவாளர்கள். எந்த சர்ச்சை என்றாலும் முந்திக்கொண்டு பேட்டி தரும் ஜெயக்குமார், தனக்கு இப்படி ஒரு சூழல் வரும் என்று கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனாலும், இந்த சலசலப்புகளுக்கு எல்லாம் அஞ்சாமல், நிருபர்களின் சரமாரி கேள்விகள் அனைத்துக்கும் பொறுமையாகப் பதில் அளித்து, தினகரன் அணிக்குப் பதிலடியும் கொடுத்திருக்கிறார் ஜெயக்குமார். மேற்கண்ட சம்பவத்தில் என்னதான் நடந்தது, யார் அந்த இளம்பெண், திரைமறைவில் இப்போது நடப்பது என்ன? களமிறங்கியது ஜூ.வி டீம். 

அ.ம.மு.க-வின் வடசென்னை மாவட்டச் செயலாளரும், தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்களில் ஒருவருமான வெற்றிவேல் சில நாள்களுக்கு முன்பு எதிரணியைப் பார்த்து, ‘பேசுவதை நிறுத்த வேண்டும், இல்லாவிட்டால் அசிங்கப்படுத்திவிடுவேன்’ என்று ஆவேசமாக வெடித்தார். புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்ததா, புரியவில்லையா என்று தெரியவில்லை. மீண்டும் சில நாள்கள் கழித்து, ‘அ.தி.மு.க எம்.பி ஒருவருக்குத் தம்பி பாப்பா பிறந்திருக்கிறது’ என்று ஒரு விஷயத்தைக் கமுக்க மாகத் தட்டிவிட்டார். விவகாரம் லேசாகப் பற்றிக்கொள்ளத் தொடங்கியது. அவரிடம் பத்திரிகையாளர் இதுபற்றித் துருவித்துருவிக் கேட்டபோது, “பாதிக்கப்பட்ட அபலைப் பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அது கிடைத்தால், நான் ரகசியங்களை வெளியிட மாட்டேன். இல்லாவிட்டால், வெளியிடுவேன். வெயிட் பண்ணுங்கள்” என்று சஸ்பென்ஸ் வைத்துப் பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick