கழுகார் பதில்கள்!

ஆர்.மோகன், பள்ளிப்பட்டு.
உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமையைப் பெறும் சர்தார் படேல் சிலை இந்தியாவில் அமைவது நமக்குப் பெருமைதானே?


ஆமாம். சுதந்திரத்துக்குப் பிறகு பல்வேறு சமஸ்தானங்களை இணைத்து இந்தியா ஒற்றை தேசமாக உருவாகக் காரணமாக இருந்த சர்தார் படேலின் இந்தச் சிலை, ஒருமைப்பாட்டின் அடையாளமாகவே அமைகிறது. 182 மீட்டர் உயரமுள்ள இந்தச் சிலை, அமெரிக்காவின் பெருமைக்குரிய சுதந்திர தேவி சிலையைவிட இரண்டு மடங்கு உயரம். ஆனால், இந்தச் சிலையை வெண்கலத்தில் வார்க்கும் பணி சீனாவில்தான் நடந்தது. பிரமாண்டப் புத்தர் சிலைகளை உருவாக்கிய அனுபவமும் அதற்கான கட்டமைப்பும் சீனாவுக்குத்தான் இருக்கிறது. அடுத்தடுத்து அம்பேத்கர் சிலை, சிவாஜி சிலை என்று திட்டமிடும்போது, ‘மேக் இன் இந்தியா’ முழக்கம் ஞாபகத்தில் இருக்க வேண்டாமா? 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick