மிஸ்டர் கழுகு: குற்றாலக் கூவத்தூர் க்ளைமாக்ஸ்!

‘‘அ.தி.மு.க-வின் ஒவ்வோர் அசைவையும் இனி நீதிமன்றம்தான் தீர்மானிக்கப்போகிறது என்று ஏற்கெனவே சொல்லியிருந்தேன் அல்லவா? அவை ஒவ்வொன்றாக நடக்க ஆரம்பித்துவிட்டன’’ என்றபடி உள்ளே நுழைந்த கழுகாருக்கு, வாய்நிறைய ஸ்வீட்டைத் திணித்தோம். ஏககுஷியாகி, செய்திகளைக் கொட்ட ஆரம்பித்தார்.

‘‘அ.தி.மு.க விஷயத்திலிருந்தே ஆரம்பிக்கிறேன். முன்னாள் அமைச்சர் பொன்னையன், ‘முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் புகாரில் சி.பி.ஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்’ என்று கட்சிக் கூட்டத்தில் வைத்து வாயைத் திறந்தார். இதைத் தொடர்ந்து, அவரை எதிர்க் கட்சியினர் காய்ச்சி எடுக்க ஆரம்பித்துவிட்டனர். அவர் அரசாங்கத்தின் பிரதிநிதியும் அல்ல, சொன்ன இடம் அரசாங்க அலுவலகமும் அல்ல என்பதுதான் காரணம். பிறகு, அதை மறுத்து பொன்னையன் பேசினார். ஆனால், அவர் சொன்னபடியே தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துவிட்டது.’’

‘‘ஆமாம்!’’

‘‘தி.மு.க இந்த விஷயத்தை எளிதில் விட்டுவிடாது என்றே தோன்றுகிறது. ‘ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை மேல்முறையீட்டுக்கு வந்தால், அதில் எங்களைக் கேட்காமல் முடிவெடுக்கக் கூடாது’ என்று கேவியட் மனுவை உச்ச நீதிமன்றத்தில் கடந்த 14-ம் தேதியே தாக்கல் செய்துவிட்டது தி.மு.க. எப்படியும் எடப்பாடியை இதில் சிக்கவைத்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் தி.மு.க., உச்ச நீதிமன்றத்தில் தன் தரப்பு வாதங்களை அழுத்தமாக எடுத்து வைக்குமாம். இதற்காக, டெல்லியின் சீனியர் வழக்கறிஞர்களிடம் பலமான ஆலோசனை நடப்பதாகவும் கேள்வி. இதற்காக தாராளமாக செலவு செய்யவும் தீர்மானித்துள்ளார்களாம்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick