“கேரள அரசு சொன்னதால் சபரிமலைக்குச் சென்றேன்!” - ரெஹனா பாத்திமா

த்திரிகையாளர் கவிதா மற்றும் கேரளப் பெண்ணியவாதி ரெஹனா பாத்திமா இருவரும் போலீஸார் புடைசூழ சபரிமலைக்குச் சென்ற காட்சிகளை, இருக்கையின் நுனியில் அமர்ந்து தொலைக்காட்சிகளில் நேரலையாக மக்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். ரெஹனா பாத்திமா, 2014-ல் பொது இடத்தில் நடைபெற்ற முத்தப் போராட்டத்தில் முன்னிலை வகித்தவர். ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் திருச்சூர் புலி நடனத்தில் 2016-ல் கலந்துகொண்ட ஒரே பெண் இவர்தான். கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் பெண்களின் ஆடை பற்றிப் பேச, அதற்கு எதிராக ரெஹனா வெளியிட்ட படம் கடும் விவாதத்தை ஏற்படுத்தியது. கேரளா முழுவதும் அறியப்படும் ரெஹனா பாத்திமாவிடம் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick