“பக்தனும் சுவாமி... பகவானும் சுவாமிதான்... ஆனால், பெண்களை அனுமதிக்கமுடியாது!”

பந்தளம் அரண்மனை அதிரடி

பரிமலை சர்ச்சை முடிவதாக இல்லை. நிலக்கல்வரை வந்து திரும்பிய சேர்த்தலை லிபி, ஆந்திராவின் மாதவி, சபரி பீடத்தைத் தாண்டி மரக்கூட்டம்வரை வந்துசென்ற லக்னோ பெண் பத்திரிகையாளர் சுகாசினி ராஜ், காரில் வைத்துத் தாக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர் பூஜா பிரசன்னா, நடைப்பந்தல்வரை சென்று பரபரப்பை உச்சத்துக்கு உள்ளாக்கிய கொச்சியின் ரெஹனா பாத்திமா, போலீஸ் பாதுகாப்புடன் சென்ற தெலங்கானா பத்திரிகையாளர் கவிதா, பம்பை வரை வந்து திருப்பி அனுப்பப்பட்ட மேரி ஸ்வீட்டி, போலீஸாரால் திருப்பி அனுப்பப்பட்ட பாலம்மா உட்பட நான்கு பெண்கள் என இவ்வளவுப் பதற்றங்களுக்கு இடையேதான், சபரிமலை ஐயப்பன் கோயிலின் ஐப்பசி மாத ஐந்து நாள்கள் பூஜைகள் நடந்தன. இதுபோன்ற சூழலால், மனம் வெதும்பிக் கிடக்கிறார்கள் பந்தளம் அரண்மனைவாசிகள். இந்த நிலையில், பந்தளம் ராஜகொட்டார நிர்வாகச் சங்கத்தின் செயலாளர் நாராயணன் வர்மாவிடம் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick