ஆஹான்

 

இரா.முருகவேள்
தமிழக சாலைகளை மேம்படுத்த உலக வங்கி நிதியுதவி அளிக்கிறது. அந்த கான்ட்ராக்டைப் பெற்ற ஓம்சக்தி கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் மோசடி செய்ததால், அதற்கு உலக வங்கி 15 மாதத் தடை விதித்துள்ளது.

ஊழல், மோசடி எல்லாம் இருக்கட்டும். எனக்கு வேறு ஒரு கேள்வி தோன்றுகிறது. நம்மிடம் வாங்கும் சாலை வரி உள்ளிட்ட வரிகள் என்னவாகின்றன? அரசு சாலை அமைக்காமல், உலக வங்கி நிதியில் ஏன் சாலை அமைக்க வேண்டும்? நமது சாலைகளை மேம்படுத்த உலக வங்கிக்கு என்ன தேவை? கிராம வளங்களைக் கொள்ளையடிக்கவும், முதலாளித்துவச் சுரண்டலை இன்னும் விரிவுபடுத்தவும்தானே?

இதேபோலத்தான் ரஃபேல் ஊழல். இந்தியா ஏன் தனது நாட், ஹெச்.எஃப் ரக விமானங்களை வளர்த்தெடுக்க முடியவில்லை? அந்த ஆராய்ச்சிக்குச் செலவிடப்பட்ட பணம் என்னவானது?

ரோடு போடவில்லை; பள்ளி, மருத்துவமனை கட்டவில்லை; உருப்படியாக ஓர் ஆயுதம் செய்யவில்லை; குடிநீர் விநியோகத்தை டெக்னாலஜி இல்லேன்னு தனியாருக்கு விடறீங்க. எங்க பணத்தையெல்லாம் என்னதாய்யா செஞ்சீங்க?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick