கேள்வி கேட்டால் சிறை... ஊழல்களை மறைக்கவா கைது நடவடிக்கை?

சென்னையை அடுத்த சிட்லபாக்கம் பகுதியில் மழைநீர்க் கால்வாய் பணி குறித்து மக்கள் சார்பாகக் கேள்விகேட்ட சமூக ஆர்வலர்களைச் சிறையில் அடைத்திருக்கிறது காவல்துறை. ‘உள்ளாட்சித் துறையில் நடக்கும் ஊழல்களை மறைக்கவே, சமூக செயற்பாட்டாளர்களை மிரட்டும் வகையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது’ எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  

தாம்பரம் அருகே உள்ள சிட்லபாக்கம் பேரூராட்சியில் மழைநீர்க் கால்வாய் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இந்தப் பணிகள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதற்காக அந்தப் பகுதியைச் சேர்ந்த ‘சிட்லபாக்கம் ரைசிங் சோஷியல் ஆக்டிவிட்டீஸ்’ அமைப்பைச் சேர்ந்த பாலச்சந்தர், சிவக்குமார், குமார் சுப்பிரமணியம், சுனில் ஜெயராமன் ஆகியோர் மீது ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்த போலீஸார், பாலச்சந்தரையும், ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியான குமார் சுப்பிரமணியத்தையும் சிறையில் அடைத்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick