கழுகார் பதில்கள்! - சசிகலாவின் பங்கு எந்த அளவு?

@மணிகண்டபிரபு, திருப்பூர்.
கருத்துச்சுதந்திரம் என்கிற பெயரில் பெரும்பாலும் சண்டைக்கு இழுப்பதுதான் நடக்கிறது... இது சரியானதா?


சுதந்திரம் என்பது ஒருவரின் மூக்குநுனி வரைதான். மூக்கைத் தொடுவதல்ல. தொட்டுவிட்டால் ஆபத்துதான் - எந்தச் சுதந்திரமாக இருந்தாலும்!

எஸ்.முருகன், திருவண்ணாமலை.
சந்தனக் கடத்தல் வீரப்பனின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்களே... இதற்கெல்லாம் தடை கிடையாதா?


கோட்சேவுக்கே சிலை வைக்கிறார்களே!

தாமஸ் மனோகரன், புதுச்சேரி-10.

அதென்ன ‘விஞ்ஞான’ ஊழல்?


‘ரத்த சம்பந்தமுள்ளவர்களுக்கு அரசுப் பணிகளுக்கான டெண்டர்களைக் கொடுக்கக் கூடாது’ என்பது விதி. ஆனால், மருமகளின் தந்தை, அண்ணன், தம்பி ஆகியோர் நிர்வாகிகளாக இருக்கும் நிறுவனத்துக்குக் கொடுத்தால், அது ரத்த சம்பந்தத்தில் வராது. வழக்குப்போட்டாலும் நிற்காது. இதற்காக மூளையை ரொம்ப தூரம் கசக்கியிருப்பார்கள் அல்லவா? இதற்குத்தான் ‘விஞ்ஞானி’ பட்டம் கொடுத்துக்கொள்கிறார்கள். 70-களில் கருணாநிதி ஆட்சியின்போது, ஏகப்பட்ட ஊழல் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், எதுவுமே நிரூபிக்கப்படவில்லை. சிக்கிக்கொள்ளக்கூடாது என்பதற்காக, திட்டமிட்டே ஊழல் செய்துள்ளனர் என்ற பிரசாரத்தை முன்வைத்த எதிர்க்கட்சிகள், ‘விஞ்ஞானரீதியில் ஊழல் செய்யும் கட்சி’ என்று தி.மு.க-வுக்கு பெயர் சூட்டினார்கள். ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா... ஏன் தற்போது எடப்பாடி ஆட்சியிலும் ‘டிஜிட்டல்’ முறைகளில்கூட ஊழல்கள் தொடர்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick