மினி மீல்ஸ்

அ.தி.மு.க-வுக்கு பி.ஜே.பி கறுப்புக்கொடி!

அ.
தி.மு.க – பி.ஜே.பி கட்சிகள் மேலிடத்தில் உறவாடினாலும், கோவையில் எப்போதும் மல்லுக்கட்டுதான். சமீபத்தில் ஆர்.எஸ்.புரம் அருகே காமராஜபுரத்தில் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பி.ஜே.பி-யினர், கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ-வான அம்மன் அர்ச்சுனனிடம் மனு அளித்தனர். ஆனால், எம்.எல்.ஏ கண்டுகொள்ளவில்லையாம். கொதித்துப்போனவர்கள், “சிட்டி முழுக்க இருக்குற டாஸ்மாக் கடைகள் அவர் கண்ணசைவில்தான் இயங்குது. அவருக்குத் தெரியாமல் இங்கு மட்டும் எப்படி டாஸ்மாக் கடை திறக்க முடியும்” என்று மல்லுக் கட்டியதுடன், அர்ச்சுனன்  பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் கறுப்புக் கொடி காட்ட வந்தனர். தீயாகத் தகிக்கிறது பகை!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick