18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு... தீர்ப்பைத் தீர்மானித்த கவர்னரின் கருத்துகள்!

நாடே எதிர்பார்த்திருந்த 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு தற்காலிக முடிவை எட்டியிருக்கிறது. ஏற்கெனவே இந்த வழக்கில் இரு மாறுபட்ட தீர்ப்புகளை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வழங்கியிருந்த நிலையில், அக்டோபர் 25-ம் தேதி அன்று நீதிபதி எம்.சத்யநாராயணன் தனது இருக்கையில் அமர்ந்தவுடனேயே, “ஏற்கெனவே இந்த வழக்கில் இரு நீதிபதிகள் கொடுத்த தீர்ப்புகளின் அடிப்படையில் நான் முடிவெடுக்கவில்லை. தனிப்பட்ட முறையில் இவ்வழக்கை விசாரித்ததன் அடிப்படையில் தீர்ப்பு வழங்குகிறேன்” என்று சொன்ன பிறகே தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார்.

கடந்த பத்து நாள்களுக்குள் தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்கிற பரபரப்பான நிலையில், தசரா விடுமுறை முடிந்ததும் தீர்ப்பு 24-ம் தேதி வரும் என்றார்கள். ஆனால், இல்லை. 25-ம் தேதிக்கான வழக்குகளின் பட்டியல் 24-ம் தேதி மாலையே அறிவிக்கப்பட்டுவிடும். ஆனால், அன்றைய தினம் மாலைவரை தீர்ப்பு விவரம் பட்டியலில் இல்லை. இரவு 11 மணிக்கு நீதிமன்ற இணையதளத்தில் 25-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் விவரங்கள் பதிவேற்றப்பட்டன. இரவிலிருந்தே தொற்றிக்கொண்டது பரபரப்பு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick