நேஷனல் ஹைவே

பி.ஜே.பி விரும்பும் பாபா!

ட்டீஸ்கர் மாநிலத்தில் செல்வாக்கான சாமியார், கம்பல் பாபா. ‘‘இந்தமுறை மீண்டும் பி.ஜே.பி-யை அரியணையில் ஏற்றுவேன்’’ என்று சபதம் எடுத்திருக்கும் இந்த பாபா, அரசியல்வாதிகளை மிஞ்சிய பதவி பேரங்களைப் பேசுகிறார். காங்கிரஸ் எம்.எல்.ஏ சிந்தாமணி மகராஜிடம், ‘‘பி.ஜே.பி பக்கம் தாவினால், தேர்தல் செலவுக்குப் பணமும் கிடைக்கும்; தேர்தலுக்குப் பிறகு அமைச்சர் பதவியும் கிடைக்கும்’’ என இவர் பேசியதைப் பதிவுசெய்து ஆடியோவை வெளியிட்டுள்ளது காங்கிரஸ். வழக்கம் போலவே, ‘அதில் இருப்பது என் குரலே அல்ல’’ என பாபா அலற, ‘‘பி.ஜே.பி-யின் திரைமறைவு டீலிங்குகளை முழுமையாக விசாரிக்க வேண்டும்’’ என கோரிக்கை வைத்திருக்கிறது காங்கிரஸ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick