ஆஹான் | Best Status of Twitter and Facebook - Junior Vikatan | ஜூனியர் விகடன்

ஆஹான்

 

P Kathir Velu
எடப்பாடியாரிடமிருந்து பள்ளிக்கூடப் பிள்ளைகள் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான ராஜதந்திரம், ‘கற்பனையான கேள்விக்குப் பதில் சொல்லமுடியாது!’

எல்லாப் புள்ளைங்களும் பரீட்சையில எழுதிட்டு வரட்டும். அப்புறம் இருக்குது கூத்து!

Muthu Krishnan
வர்மாவுக்கு பதில் நாகேஸ்வர ராவ் பதவியேற்றுள்ளார்.
நாகேஸ்வர ராவைப் பற்றி விசாரிக்கச் சொல்லி லஞ்ச ஒழிப்புத் துறையை சி.பி.ஐ கேட்டது. ஆனால், லஞ்ச ஒழிப்புத் துறை அதை மறுத்துவிட்டது.
அஸ்தானா மீதான விசாரணையை அலோக் வர்மா நடத்தினார்.
அஸ்தானாவை நியமித்தது சரியில்லை என்றது சி.பி.ஐ. ஆனால், அதை லஞ்ச ஒழிப்புத் துறை அனுமதித்தது.
ரஃபேல் ஆவணங்களைச் சரிபார்க்கச் சொல்லி சி.பி.ஐ-க்கு உத்தரவிடுகிறது உச்ச நீதிமன்றம். வர்மா அந்தப் பணியில் ஈடுபடுகிறார்.
இப்போது வர்மா மீது விசாரணைக்கு உத்தரவிடுகிறது லஞ்ச ஒழிப்புத் துறை.
# உள்வட்டம், வெளிவட்டம் இப்ப புரியும் என்று நினைக்கிறேன்.

Abdul Hameed Sheik Mohamed
மிமிக்ரி ஆர்டிஸ்ட்ங்க தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை பேர்யா இருக்கீங்க? ஒரே அராஜகமா இருக்கு. அத்தனை பேரையும் தேச விரோதச் சட்டத்தில் கைது பண்ணணும். என்னது, சின்னப்புள்ளத்தனமா இருக்கு!

Raajaa Chandrasekar
வசனங்களால் வாழ்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick