கோவையைச் சுட்டெரிக்கும் செங்கல் சூளைகள்!

திசைமாறும் யானைகள்... வழிமாறும் விவசாயம்

கோவையிலிருந்து ஆனைகட்டிக்குச் செல்லும் வழியில் இருக்கின்றன, தடாகம், மாங்கரை உள்ளிட்ட கிராமங்கள். நீலகிரியின் உயிர்ச்சூழல் மண்டலத்தில், கோவை மாவட்டத்தில் இருக்கும் ஒரே பகுதி ஆனைகட்டிதான். அச்சுறுத்தும் அளவுக்கு இங்கே செங்கல் சூளைகள் முளைத்திருப்பது இந்த இயற்கைச் சூழலுக்குப் பங்கமாகியிருக்கிறது.

விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்த இந்த கிராமங்களில், 20 ஆண்டுகளுக்கு முன் கடும் வறட்சி ஏற்பட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் மக்கள் திகைத்திருந்த நேரத்தில்தான், செங்கல் சூளைகள் முளைக்கத் தொடங்கின. வந்த விலைக்குச் செங்கல் சூளைகளுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன. கணுவாய், தடாகம், மாங்கரை, சின்னத்தடாகம், காளையனூர், நஞ்சுண்டாபுரம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகள் முளைத்தன. தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் இங்கிருந்து செங்கல்கள் போகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick