எப்போது நினைவு இல்லமாகும் போயஸ் கார்டன் வீடு! | Jayalalithaa house in Poes Garden to memorial - Junior Vikatan | ஜூனியர் விகடன்

எப்போது நினைவு இல்லமாகும் போயஸ் கார்டன் வீடு!

ஜெயலலிதாவின் மரணம் எப்படி இன்றுவரை புரியாத புதிராக இருக்கிறதோ, அதுபோலவே அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லமும் ஒரு புரியாத புதிராகவே உள்ளது.

எடப்பாடி அணியுடன் இணைவதற்கு, ஓ.பி.எஸ் வைத்த நிபந்தனைகளில் ஒன்று, ‘ஜெ. வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக அரசு மாற்ற வேண்டும்’ என்பதுதான். இதையடுத்து, ‘‘ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும்” என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதைத்தொடர்ந்து, போயஸ் கார்டன் இல்லத்தில் சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஆய்வுமேற்கொண்டார். “இது எங்கள் அத்தையின் சொத்து. அவரின் நேரடி வாரிசான எங்களுக்குத்தான் அந்த வீடு சொந்தம்” என ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபாவும் தீபக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick