அண்ணா பல்கலைக்கழக பட்டமா? செல்லாது... செல்லாது! | TNPSC rejected Anna University Graduation - Junior Vikatan | ஜூனியர் விகடன்

அண்ணா பல்கலைக்கழக பட்டமா? செல்லாது... செல்லாது!

நிராகரிக்கும் டி.என்.பி.எஸ்.சி

ல கல்லூரிகளில் நடத்தப்படும் பாடப்பிரிவுகளுக்கு அங்கீகாரம் தரும் அதிகாரத்தில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகமே அங்கீகாரம் இல்லாத பட்டங்களைத் தருமா? அப்படித்தான் தந்திருக்கிறது. தரமான கல்விக்குப் பெயர்பெற்ற அண்ணா பல்கலைக்கழகம், இப்போது தரக்குறைவான பிரச்னைகளால் பெயர் கெட்டு வருகிறது. தேர்வுத்தாள் மறுமதிப்பீடு செய்வதில் ஊழல் எனத் தொடங்கியது பிரச்னை. இப்போது, `அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த பட்டம் செல்லாது’ என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) அறிவிக்க... பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

வேளாண் உதவிப் பொறியாளர் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் தகுதித்தேர்வை டி.என்.பி.எஸ்.சி நடத்திவருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் வேளாண் மற்றும் பாசனப் பொறியியல் படித்த 25-க்கும் மேற்பட்டவர்கள் இதில் வெற்றி பெற்றிருந்தும், ‘படிப்பு செல்லாது’ என்று நேர்முகத்தேர்வுக்கு அனுமதிக்கப்படவில்லை.

இப்படி வாய்ப்பு மறுக்கப்பட்ட தால் போராடிவரும் அகல்யா விடம் பேசினோம். ``2008-ம் ஆண்டில் ப்ளஸ் டூ முடித்து, இன்ஜினீயரிங் கவுன்சலிங் வழியே அண்ணா பல்கலைக்கழகத்தில் அக்ரிகல்சர் அண்டு இர்ரிகேஷன் இன்ஜினீயரிங் படிப்பைத் தேர்ந்தெடுத்தேன். 2012-ம் ஆண்டு படித்து முடித்ததும், தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. டி.என்.பி.எஸ்.சி கடந்த ஆண்டு வேளாண் உதவிப் பொறியாளர் பணிக்கான விளம்பரத்தை வெளியிட்டு, தேர்வு நடத்தியது. இதில் என்னைப்போல் அண்ணா பல்கலைக்கழகத்தில் அக்ரிகல்சர் அண்டு இர்ரிகேஷன் இன்ஜினீ யரிங் படித்த ஆறு பேர் தேர்ச்சி பெற்றோம். ஆனால், சான்றிதழ் சரிபார்ப்புக்குச் சென்றபோது, ‘அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த பட்டம் செல்லாது’ என்று எங்களைத் திருப்பி அனுப்பி விட்டது டி.என்.பி.எஸ்.சி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick