இடுக்கி பயத்தை மறைக்க முல்லைப்பெரியாறு பழி! - திசைதிருப்பும் கேரளா | Mullaperiyar Dam issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்

இடுக்கி பயத்தை மறைக்க முல்லைப்பெரியாறு பழி! - திசைதிருப்பும் கேரளா

கேரளாவில் வெள்ளம் வடியத் தொடங்கிய நிலையில், தமிழகத்துடன் முல்லைப்பெரியாறு அணை தொடர்பான மோதலை கேரள அரசு தொடங்கிவிட்டது.

தென்மேற்குப் பருவமழையால், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. அதை, 139 அடியாக உடனே குறைக்க வலியுறுத்தி கேரளாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ரசூல் ஜோயி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அணை குறித்து ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, அணையின் கண்காணிப்புத் துணைக் குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதனால், முல்லைப்பெரியாறு பாசன விவசாய சங்கத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர். ஆய்வு செய்த துணைக்குழு, அணையின் நீர்மட்டத்தை 139 அடியாகக் குறைக்க உத்தரவிட்டது. அதையடுத்து, அணையின் நீர்மட்டம் 139 அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘அணையின் நீர்மட்டத்தைக் குறைப்பதற்காகத் திறந்துவிடப்பட்ட தண்ணீரால்தான், இடுக்கி அணை நிரம்பி கேரளம் வெள்ளக்காடானது’ என சில கேரள ஊடகங்களும், அரசியல்வாதிகளும் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளனர். இதன் பின்னணி என்ன?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick