கழுகார் பதில்கள்! - தமிழகத்தில் மட்டும் ஏன் ரெய்டு? | Kazhugar Questions And Answers - Junior Vikatan | ஜூனியர் விகடன்

கழுகார் பதில்கள்! - தமிழகத்தில் மட்டும் ஏன் ரெய்டு?

@இ.முத்துக்குமார், கிருஷ்ணாபுரம்.

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதா?

நிச்சயமாக. சமீபத்திய பெருமழையைக் காரணம் காட்டி, 142 அடிக்குக் கீழாக நீர்மட்டத்தைக் குறைக்கவேண்டும் என்று கேரளா எழுப்பிய கோரிக்கையைப் பரிசீலிக்கச் சொல்லி உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால், தமிழக அரசு ஏற்கவில்லை. ‘இதில் அரசியல் ஒளிந்திருக்கிறது. இதை வைத்தே எதிர்காலத்தில் அணையின் நீர்மட்டத்தை நிரந்தரமாகக் குறைத்துவிடுவார்கள். தமிழகத்துக்குத் தண்ணீர் கிடைக்காமல் போய்விடும்’ என்று விவசாயிகள், அரசியல் தலைவர்கள் என பலரும் குரல் கொடுத்தனர். தமிழக அரசும் இதில் உறுதியாக நின்றது. அணையின் உறுதித்தன்மை, மீண்டும் ஒரு தடவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதைவிட மிக உயரமான இடுக்கி அணைமீது சேட்டன்களுக்கு ஒரு பயமும் இல்லையாம் - கண்டுகொள்வோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick