மிஸ்டர் கழுகு: விரைவில் ரிலீஸ்? | Mr.Kazhugu - Politics & Current affairs - Junior Vikatan | ஜூனியர் விகடன்

மிஸ்டர் கழுகு: விரைவில் ரிலீஸ்?

‘‘பெங்களூரில் நல்ல குளிர்’’ என்றபடி உள்ளே வந்தார் கழுகார்.

‘‘என்ன திடீர் பயணம்?’’ என்றோம். ‘‘காரணம் இருக்கிறது’’ என்றவர், ‘விரைவில் ரிலீஸ்’ என்ற தலைப்பை எழுதிக்கொடுத்து, ‘‘சசிகலாவை அட்டைப்படமாக வைத்து, இந்தத் தலைப்பை வையும்’’ என்றார்.

‘‘அப்படியானால் தண்டனைக் காலம் முடிவதற்குள்ளேயே சிறையிலிருந்து வெளியே வருகிறாரா சசிகலா?’’

‘‘ஆமாம். அதற்கான சூழல் கனிந்து வந்திருப்பதாக சசிகலா குடும்பத்தினரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும் உற்சாகத்துடன் சொல்கிறார்கள். ஆகஸ்ட் 18-ம் தேதி சசிகலாவின் பிறந்த நாள். அன்றைய தினத்தில் அ.ம.மு.க-வினர் ‘சிறையில் இருக்கும் சசிகலா சீக்கிரமே வெளியே வர வேண்டும்’ என்று தமிழகத்தின் முக்கியக் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்தனர். அதேபோல், பிறந்த நாளுக்கு சில தினங்களுக்கு முன்பு தினகரனின் மனைவி அனுராதா, தினகரனின் மைத்துனர் டாக்டர் வெங்கடேஷ் என அனைவரும் குடும்ப சகிதமாக தஞ்சாவூரில் உள்ள தஞ்சைபுரீஸ்வரர் கோயிலில் யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் செய்தனர். இது, குபேரன் வழிபட்ட கோயில். இழந்ததை மீட்கவும், ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு மீண்டும்  அது கிடைக்கவும் அருள்புரியும் சிறப்புமிக்க தலம். இங்கு பூஜை செய்த பிரசாதங்களை தினகரன் எடுத்துச்சென்று சசிகலாவிடம் கொடுத்தார். அப்போது தினகரனிடம், ‘எப்போதும் போல் நீ உன் வேலைகளைப் பார்த்துக்கொண்டிரு. சீக்கிரமே நமக்கு நல்ல சேதி கிடைக்கும்’ என்று கூறி அனுப்பினாராம் சசிகலா.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick